எருமாபாளையம் ஊராட்சி பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
எருமாபாளையம் ஊராட்சி பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
சேலம் மாவட்டம் எருமாபாளையம் முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் செங்கோடன் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கொடுக்கப்பட்ட மனுவில் எருமாபாளையம் ஊராட்சியில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள் என்றும் அவர்கள் 75 சதவீத மக்கள் கூலி வேலை மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலையில் ஈடுபடுபவர்கள் என்றும், ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படையும். பொதுமக்கள் வசிக்கும் வீட்டுவரி குடிநீர்வரி ஆகியவை உயர்த்தப்படும் என்றும் இதனால் பொதுமக்கள் வரிகட்ட முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். மேலும் கனிமவளத்துறையின் மூலம் கல்குவாரி ஏலம் விடப்பட்டு அரசுக்கு தற்போது வருவாய் வந்து கொண்டு இருக்கிறது.ஆனால் மாநகராட்சியுடன் இணைத்தால் கனிம வளத்துறையின் மூலம் கல்குவாரி ஏலம் விடமுடியாது என்றும்,இதனால் பொதுமக்கள் தங்களது அடிப்படை அனைத்து உரிமைகளும் பாதிக்கப்படும் என்றும் தங்கள் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
What's Your Reaction?