கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓசி பிரியாணி வாங்க ஒன்றரை கிலோ மீட்டர் காத்திருக்கும் திருச்சி பொதுமக்கள் . கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்

Jul 28, 2024 - 12:28
Jul 28, 2024 - 13:48
 435
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓசி பிரியாணி வாங்க ஒன்றரை கிலோ மீட்டர் காத்திருக்கும் திருச்சி பொதுமக்கள் . கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்

திருச்சி புதுக்கோட்டை சாலையில் தற்போது திறக்கப்பட்டுள்ள தொப்பி வாப்பா என்ற பிரியாணி கடையில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்ற விளம்பரத்தை கண்டு குவிந்து வரும் பொதுமக்கள் . கடந்த பத்து நாட்களுக்கு முன்பு போஸ்டர் விளம்பரங்கள் மூலம் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி என்று அறிவித்தது நிர்வாகம் . தற்போது இந்த ஓசி பிரியாணியை வாங்க கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்துக்கொண்டு உள்ளனர் . ஏற்கனவே இதே போன்று ஈரோடு மாவட்டத்தில் இப்படி ஓசி பிரியாணி என்ற பெயரில் நடைபெற்ற திறப்பு விழா போது வரிசையில் நின்று கொண்டு இருக்கும் பொதுமக்களுக்கு சாமியான பந்தல், குடிநீர் வசதி போன்ற எந்த ஏற்படுத்தாமல் மக்களை வாட்டி வதைத்த அந்த கடையை இழுத்து மூடினார் அந்த மாவட்ட ஆட்சியர் . திருச்சி மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கையில் இறங்குமா? இந்த கடைக்கு 10 மேற்பட்ட போலீசார் வேறு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow