விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சிறப்பாக உழைத்த மயிலாடுதுறை தொகுதி பொறுப்பாளர் ஜித்து என்கிற ராஜரத்தினத்தை பாராட்டிய அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில், அவர்களுக்கு ஸ்பெஷல் விருந்து தந்து அசத்தினார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி.
சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள குறிஞ்சி இல்லத்தில், சீரகசம்பா மட்டன் பிரியாணி , சிக்கன் 65 , சிக்கன் கிரேவி. மீன் போன்ற அசைவ உணவுடன் இந்த விருந்தினை அமைச்சர் உதயநிதி அளித்தார். இதில் மயிலாடுதுறை தொகுதி பொறுப்பாளர் ஜித்து என்கிற ராஜரத்தினம் அவர்களை தனிப்பட்ட முறையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாராட்டினார் . இந்நிகழ்ச்சியில், திமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த அமைச்சர்கள் கேஎன் நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல, ஆஸ்டின், தாயகம் கவி மற்றும் டாக்டர் கோகுல், மணிமாறன், ஹெலன் டேவிட்சன், அஞ்சுகம், ராணி, முத்துசெல்வி உட்பட 234 சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களுமே இந்த விருந்தில் பங்கேற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டனர்.
முடிவில் அனைவரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதி பொறுப்பாளர்களின் பணிகளை வெகுவாக பாராட்டினார். அவர்களுடன் கலந்துரையாடும்போது, "லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி, 2026 தேர்தலிலும் இப்பணி தொடர வேண்டும், கிராமம் கிராமமாக சென்று திமுக ஆட்சியின் திட்டங்களை மக்கள் மத்தியில் பேச வைக்க வேண்டும், அதே சிந்தனையில், சட்டசபை தேர்தல் வெற்றிக்கும் பணியாற்ற வேண்டும்" என்றும் உதயநிதி கேட்டுக் கொண்டார்.
What's Your Reaction?



