திருச்சிமலைக்கோட்டைதெப்பக்குளத்தில் நீரை நிரப்புவதற்கு காவிரியில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வர வேண்டும் இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் கோரிக்கை!

May 22, 2026 - 17:11
 12
திருச்சிமலைக்கோட்டைதெப்பக்குளத்தில் நீரை நிரப்புவதற்கு காவிரியில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வர வேண்டும் இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் கோரிக்கை!

திருச்சிமலைக்கோட்டைதெப்பக்குளத்தில் நீரை நிரப்புவதற்கு காவிரியில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வர வேண்டும் இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் கோரிக்கை!

திருச்சி,மே.22- திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரும் நடவடிக்கை தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்தது குறித்து, இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் சார்பில் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்கத்தின் செயல் தலைவர் வையாபுரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை வழக்கறிஞர் மெல்கியூ, இந்த திருக்கோவில்கள் மீட்பு இயக்க நிறுவனத் தலைவர் மகேஸ்வரி வையாபுரி ஆகியோர் கலந்துகொண்டு கூட்டாக செய்தியாளர் சந்தித்து பேசும்போது : - ஆயிரம் ஆண்டுகள் பழமையான மலைக்கோட்டை தெப்பக்குளத்துக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு காவிரியில் இருந்துதான் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், தற்போது சின்டெக்ஸ் டேங்க் மூலம் தண்ணீர்வழங்குவதாகதிருச்சிராப்பள்ளி மாநகராட்சி கூறுவதுஎன்பது ஏற்புடையதுஅல்ல.மாவட்டஆட்சியரும்,நகராட்சி,ஆணையரும்தண்ணீர் காவேரியில் இருந்து கொண்டு வர இயலாது என பொய்யாக கூறுவதை ஏற்க முடியாது. மாவட்ட நிர்வாகம்மற்றும்இந்துசமயஅறநிலைத்துறைதவறானநிர்வாகத்தினால் தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளநிலையில், குளத்திற்கு தண்ணீர் வருவதுதடை செய்யப்பட்டுள்ளது.காவிரியில் இருந்துதண்ணீர்கொண்டுவருதற்கும்,தண்ணீரைவெளியேற்றுவதற்கு வசதிகள் உள்ளது. இருப்பினும் மாவட்டநிர்வாகம்உரியஒத்துழைப்புஅளிக்கவில்லைஎனநீதிமன்றத்தில் ஆய்வுசெய்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.மன்னர் காலத்தில்சின்டெக்ஸ்டேங்க்இல்லாதகாலத்தில்தற்போதுஅதிகாரிகள் சின்டெக்ஸ் டேங்க் கொண்டு தான் தண்ணீர் நிரப்புகிறோம் என கூறுவதுஏற்புடையதுஅல்ல.கோவில்நிலங்களையும்தெப்பக்குளத்தையும்பராமரிப்பதில்அரசுதவறிவிட்டது.மாவட்டநிர்வாகம்மற்றும்மாநகராட்சி நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின்செயல்பாடுகளுக்குஎதிராகசிபிஐவிசாணை கேட்டுசென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். மலைக்கோட்டையை சுற்றிலும் அகழி இருப்பதற்கான ஆதாரங்கள் 1966ல்பதிவேட்டில்உள்ளது,காலப்போக்கில் அது ஆக்கிரமிப்புகளால் மூடி மறைக்கப்பட்டுவிட்டது. இந்து சமயஅறநிலைத்துறைமெத்தனத்தினால்தான்பல்வேறுகோவில்களையும்பல்லாயிரம்ஏக்கர்நிலங்களையும் இழந்து வருகிறோம. புராதான சின்னங்களை பாதுகாக்க தொல்லியல் துறை தவறிவிட்டது. மேலும் அரசு அதிகாரிகள் மீது நம்பிக்கை கிடையாது, தனிநபர்கள் லாபத்திற்காக அறநிலையத்துறை மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்கள் அளிக்கப்பட்டு விட்டது. மேலும், தெப்பக்குளத்தை தூர்வார மற்றும் பராமரிக்க தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டாம். கோவில் சொத்துக்களை கொள்ளை அடிக்காமல் இருந்தாலே போதுமானது என தங்களது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதாக அவர்கள் கூறினர். பேட்டியின்போதுஇந்துதிருக்கோவில்கள் மீட்பு இயக்கத்தின் செயல் தலைவர் வையாபுரி,மாநகர் மாவட்ட தலைவர் நாராயணன் ,புறநகர் மாவட்ட தலைவர் வரதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow