தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் இளைய சமுதாயத்திற்கான பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகள்

Apr 29, 2023 - 06:50
 320
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் இளைய சமுதாயத்திற்கான பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகள்

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் இளைய சமுதாயத்திற்கான பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகள்

 பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள்,பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற பிறகு, எந்தப் படிப்பை தேர்வு செய்யலாம் என்ற சிந்தனையில் இருப்பார்கள். பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு பொறியியல், கட்டிடக்கலை, மருத்துவம், நர்சிங், சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு பட்டப்படிப்புகள் உள்ளன.ஆனால், பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள்,

எளிதாக உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பினைப் பெற குறுகிய காலத் தொழிற்கல்வியான பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பினை தேர்வு செய்வது சிறப்பானதாக இருக்கும்.

பொதுவாக, மாணவர்களின் திறமைக்கும், ஆர்வத்திற்கும் தகுந்தாற்போல் படிப்பைத் தேர்வு செய்வது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது. குறிப்பாக, பத்தாவது பயின்ற மாணவர்கள்பொறியியல் படிப்பை தேர்வு செய்ய விருப்பம் இருந்தால், அவர்கள் பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பை தேர்வு செய்யலாம்.அதிலும், 66ஆண்டுகள் கல்விச் சேவையில் அனுபவம் பெற்ற,தேசியத் தரச்சான்று (NBA) பெற்ற, தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிப்பது சிறந்த தேர்வாக இருக்கும்.

பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

1.     பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புஎன்பதுமூன்றாண்டு காலம் மட்டுமே பயிலும் குறுகிய கால படிப்புகள். இதில்,பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் முதலாமாண்டிலும், பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும் சேர்க்கை பெற்று பயிலலாம்.

2.     தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில், பொறியியல்(Engineering), தொழில்நுட்பம்(Technology)என்ற பிரிவுகளில் சிவில்(Civil), மெக்கானிக்கல்(Mechanical), எலக்ட்ரிக்கல்(EEE), புரொடக்சன்(Production), நெசவியல் (Textile Technology), எலக்ட்ரானிக்ஸ்(ECE), கம்ப்யூட்டர்(Computer), ஆர்கிடெக்ச்சர் (Architecture), அக்ரிகல்ச்சர் டெக்னாலஜி (Agricultural Technology), செயற்கை நுண்ணறிவு &இயந்திர கற்றல் (Artificial Intelligence & Machine Learning)போன்ற டிப்ளமோ படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

3.     டிப்ளமோ படிப்புகளில் கருத்தியல் (Theory)மற்றும் செய்முறை(Practical)பயிற்சிகள் சம விகிதத்தில் கலந்துகற்றுத்தரப்படுகிறது.டிப்ளமோ படிப்புகளில், கல்வி பயிலும் போதே, மாணவர்கள் தங்களின் பருவத்தேர்வு விடுமுறை நாட்களில், தங்கள் துறை சார்ந்த தொழில்நிறுவனங்களில்உள்ளிருப்புப் பயிற்சி (Internship) பெறும் வாய்ப்புகளைப்பெறுகிறார்கள்.

4.     மத்திய, மாநில அரசுகள், மாணவர்களுக்குத் தேவையானதிறன் சார்ந்த (Skill Development) படிப்புகளைவழங்குவதில்மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.தமிழ்நாடு அரசு, "நான் முதல்வன்"என்ற திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய்களை பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஒதுக்கியுள்ளது. டிப்ளமோ பயிலும் மாணவர்கள் "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம், தங்கள் துறை சார்ந்த சிறப்புப் பாடங்களை கூடுதலாக கற்றுக் கொண்டு, அத்துறையில் சிறப்பான தேர்ச்சி பெறலாம். உதாரணமாக, டிப்ளமோ சிவில் படிக்கும் மாணவர்கள், அத்துறையில் Mechanical Electrical Plumbing (MEP), Building Information Modeling (BIM)போன்ற சிறப்புப் பாடங்களை கற்றுப் பயனடையலாம்.

5.     உயர்கல்வி வாய்ப்புகள்

அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழக (AICTE)மாணவர் சேர்க்கை விதிகளின்படி, டிப்ளமோவில் எந்தப் பிரிவில் பயின்றிருந்தாலும், பி.இ  இரண்டாம் ஆண்டில்  (Lateral Entry)தாங்கள் விரும்பும் எந்த ஒருபாடப்பிரிவிலும் சேர்க்கை பெற்று பயிலலாம்.உதாரணமாக, சிவில் டிப்ளமோ பயின்ற மாணவர் பி.இ இரண்டாம் ஆண்டில் (Lateral Entry), Computer, Civil, Mech, EEE போன்ற பாடங்களையோஅல்லது தான் விரும்பும் எந்த ஒரு பாடப்பிரிவிலோ சேர்க்கை பெற்று உயர்கல்வி பயிலலாம்.தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ பயின்ற சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்று உயர்கல்வி பயில்கிறார்கள்.

6.     கல்வி உதவித்தொகைகள்

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ பயிலும் மாணவ, மாணவியருக்கு, அவர்களின் படிப்பு தடையின்றித்  தொடர, அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் வழங்கும் கல்வி உதவித்தொகைகளைப் பெறுவதற்கு மாணவர்களுக்கு சிறப்பாக வழிகாட்டப்படுகின்றது.

a)      அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம்(AICTE), பெண்களின் சுயமேம்பாட்டினைஊக்குவிக்கும்பொருட்டும், அவர்கள்தொழிற்கல்வியில்சிறந்துவிளங்கவும், பொறியியல்படிப்புகளில்டிப்ளமோமற்றும்டிகிரிபடிக்கும்மாணவிகளுக்கு, AICTE-Pragati Scholarshipதிட்டத்தின்மூலமாக, வருடந்தோறும்ரூ.50,000/-கல்விஉதவித்தொகையாகவழங்கிவருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில், இக்கல்லூரியில் பயிலும் 192 மாணவிகளுக்கு ரூ.100 லட்சம் AICTE-Pragatiகல்வி உதவித்தொகைகளை பெற்றுக் கொடுத்து சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

b)     மாற்றுத்திறனாளிகள்தொழிற்கல்வியில்மேம்பட, AICTE-Saksham Scholarshipமூலமாகவருடந்தோறும்ரூ.50,000/-கல்விஉதவித்தொகையாகவழங்கிவருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில், இக்கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.1.00 லட்சம் AICTE-Sakshamகல்வி உதவித்தொகை பெற்றுத் தரப்பட்டுள்ளது. 

c)      தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 6முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து, பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை பெறும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது.இக்கல்லூரியில் பயிலும் 56 மாணவியர் ரூ.6.72 லட்சம் புதுமைப்பெண் கல்வி உதவித்தொகை பெற்றுப் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

d)     அனைத்து மாணவர்களும் தடையின்றி உயர்கல்வி பயிலதமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்ட (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC), ஆதிதிராவிடர் (SC) மற்றும் பழங்குடியின (ST) மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்குகின்றது.  தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும்  563மாணாக்கர்கள்இக்கல்வி உதவித்தொகைகளைப் பெற்று பயனடைந்துள்ளனர்.

e)      தலைசிறந்த முன்னணி நிறுவனங்களின் சமுதாய  பங்களிப்பு திட்டத்தின் (CSR)கீழ், டைட்டன் (Titan)கல்வி உதவித்தொகை, JSW Udaanகல்வி உதவித்தொகை, KCமகேந்திரா கல்வி உதவித்தொகை, Siemensகல்வி உதவித்தொகை, Proultimaகல்வி உதவித்தொகைபோன்ற பல்வேறு தொழில்நிறுவனங்களின் கல்வி உதவித்தொகைகள் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. 

f)       தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 51 மாணவியருக்கு, Mando Automotive Indiaநிறுவனம், தலா ரூ.45,000/-வீதம்ரூ.23.00லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளது.

g)      தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரிநிர்வாகம், சீதா வள்ளியப்பா அறிவு வங்கி (Seetha Valliappa Knowledge Bank)என்ற திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையினை வழங்குகின்றனர். 

h)     தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் (TPT Alumni Association)மூலமாக வருடந்தோறும் ரூ.5.00லட்சம் வரையிலான கல்வி உதவித்தொகைவழங்கப்பட்டு வருகின்றது.

பொருளாதார காரணங்களினால் மாணவ, மாணவியரின் படிப்பு தடையின்றித்தொடர, தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் சீரிய முயற்சியினால் ஆண்டுதோறும் ரூ.175.00லட்சத்திற்கும் மேல் கல்வி உதவித்தொகைகளை தொடர்ந்து பெற்றுத் தருகின்றது.

வேலைவாய்ப்புகள்

·         டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு, Air-force Group-X,Navy MR/NMR,Navy Chargeman,Coastguard Yantrik,Army GD-General Duty,Army Tradesmanபோன்ற பதவிகளில், Territorial Army,DRDO, CISF, BSF, CRPFஆகிய தேசிய பாதுகாப்புத்துறைகளில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன.

·         சிவில் மற்றும் ஆர்கிடெக்ச்சர்பயிலும் மாணவர்கள் L&T, Tata Projects, Harris Rebar, Cadeploy, Atkins, Vee Technologies, Cads Software, Rebar DD, etc. ஆகிய உலகத்தரம் வாய்ந்த தொழில் நிறுவனங்களில்MEP, Rebar detailing, Construction and Project Management, Quantity Surveying, Revit Architecture, RebarCAD, Land Surveying (Drone Survey), TEKLA Software போன்ற துறைகளில் அதிக ஊதியத்துடன் பணியில் சேரலாம்.

·         இயந்திரவியல்(Mechanical), உற்பத்தி(Production), மெக்கட்ரானிக்ஸ் (Mechatronics) மற்றும் ஆட்டோமொபைல் (Automobile)பயிலும்மாணவர்களுக்கு, Ashok Leyland, Aditya Birla, Daimler, UNO Mindaபோன்றநிறுவனங்களில்ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.மேலும், சோனா ஸ்டார் (Sona Star), TANCAMமற்றும்டஸ்ஸால்ட் (Dassault)நிறுவனங்களுடன் இணைந்து 3டி அனுபவப் படிப்பை (3D Experience Course)வழங்கி வருகின்றது.இத்தொழிற்பயிற்சி பயின்ற மாணவர்கள், Quest Global, Cameron, Hepatica Tech, TEAL, Fujitechபோன்ற நிறுவனங்களில் வடிவமைப்புத் துறைகளில் (Design Engineering)அதிக ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெறலாம்.

·         எலெக்ட்ரிக்கல் (EEE) &எலக்ட்ரானிக்ஸ் (ECE) பயிலும்மாணவர்களுக்கு, Salcomp, VVDN Technologies, Tessolve, TVM Signalling, Delphi TVS, Johnson Electric, JasminInfotech, Data Pattern போன்றமுன்னணி தொழில்நிறுவனங்களில்எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன.

·         கணினிப் பொறியியல் (Computer Engineering)மற்றும் செயற்கை நுண்ணறிவு &இயந்திர கற்றல் (Artificial Intelligence & Machine Learning)பயிலும்மாணவர்களுக்கு,Infosys, Wipro, TCS, Freshworks, ZoHo, Vee Technologies, Cherry Labs, Emertxe IT, HCL போன்றமுன்னணி ஐடி நிறுவனங்களில், மிகச் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற இயலும்.

·         வேளாண் தொழில்நுட்பம் (Agricultural Technology)பயிலும்மாணவர்கள், Massey Ferguson (TAFE), Mahindra & Mahindra, John Deere, Kubota, Escorts Group, Rasi Seeds, JK Agri Genetics ஆகிய முன்னணி நிறுவனங்களில்நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.

·         தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 465மாணவர்களுக்கு, இறுதியாண்டுத் தேர்வுக்கு முன்பாகவே, 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில், வருடத்திற்கு ரூ.4.00முதல் ரூ.5.00லட்சம் வரையிலான ஊதியத்தில், 800க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகள்வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றையநவீன வளர்ச்சிமற்றும்வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, டிப்ளமோ பாடத்திட்டங்களை உருவாக்கி, செயல்முறை பயிற்சியுடன், திறன் மிகுந்த மாணவர்களை உருவாக்கி, அவர்களுக்கு சிறந்த தொழில்நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பினை பெற்றுத் தருவதிலும், தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த டிப்ளமோ பொறியாளர்களை உருவாக்கித் தருவதிலும் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரிபெரும் பங்கு வகிக்கின்றதுஎன்று கல்லூரியின் துணைத்தலைவர் திரு.தியாகு வள்ளியப்பா மற்றும் முதல்வர் முனைவர்.வீ.கார்த்திகேயன் ஆகியோர் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow