சேலம் மாவட்டம்,ஏற்காடு வட்டம்,செம்மடுவு, மஞ்சகுட்டை கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச்செயலாளர் சுப்பிரமணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தார்

Jan 22, 2025 - 08:49
 6
சேலம் மாவட்டம்,ஏற்காடு வட்டம்,செம்மடுவு, மஞ்சகுட்டை கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச்செயலாளர் சுப்பிரமணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தார்

சேலம் மாவட்டம்,ஏற்காடு வட்டம்,செம்மடுவு, மஞ்சகுட்டை கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச்செயலாளர் சுப்பிரமணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தார்.

புகார் மனுவில் ஏற்காடு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் மைக்கேல் அந்தோணி ஏற்காட்டில் உள்ள பட்டியல் இன பழங்குடி ஆதிதிராவிடர் இளைஞர்கள் மீது தேவையில்லாமல் பொய் வழக்கு போடுவதும்,புரோக்கர்கள் மூலம் நேரடியாக காவல் நிலையத்திலேயே கட்டப்பஞ்சாயத்து செய்தும் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தும் புகார் கொடுக்கச் செல்லும் மனுதாரர் மீது பொய் வழக்கு போட்டு மிரட்டி அச்சுறுத்துவதுதாகவும், மேலும் கடந்த 16.01.2025 தேதி இரவு ஏற்காட்டைச் சேர்ந்த பிஜேபி பிரமுகர் ஜெயந்தி என்பவரின் மகன்கள் தமிழ்,சிவகிரி, ஜெயந்தியின் கணவர் மற்றும் கடையில் அடியாட்களாக வைத்துள்ள பிரகாஷ், ஜெயந்தியின் மருமகன் யுகேந்திரன் ஜெயந்தியின் கார் டிரைவர் என ஐந்து பேர் சேர்ந்து,தனது மகன் ரமேஷ் என்பவரின் இரண்டாவது மகன் தமிழரசனிடம்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒண்டிக் கடை பகுதிக்கு வரவைத்து கீழே தள்ளி கத்தியை காட்டி மிரட்டியதுடன் வன் சொற்களால் பேசியும் அடித்து கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். 

இந்த சம்பவம் ஒண்டிக்கடை பகுதியில் நடந்த பொழுது அருகில் இருந்த பொதுமக்கள் தமிழரசனை காப்பாற்றி ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த தனது பேரனிடம் ஏற்காடு காவல்துறைக்கு அரசு மருத்துவமனையில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த ஏற்காடு உதவி காவல் ஆய்வாளர் மைக்கேல் அந்தோணி உத்தரவின் பேரில் ஏற்காடு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் அரசு மருத்துவமனை சென்று உள்நோயாளியாக உள்ள தமிழரசனிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார்.ஆனால் மருத்துவமனையில் தமிழரசனிடம் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் உண்மையான வாக்குமூலம் வாங்குவதற்கு மாறாக  நீ ஒரு அக்யூஸ்ட் உனக்கு வயது குறைவாக உள்ளதாகவும் உன்னை தண்டனையிலிருந்து  காப்பாற்றுவதற்கு நான் எழுதியபடி கையொப்பம் போட வேண்டும் என்றும், இல்லையென்றால் ஜெயில் தண்டனை உறுதி என்று மிரட்டி தமிழரசனிடம் கையொப்பம் வாங்கியுள்ளார்.
எனவே காவல் உதவி ஆய்வாளர் மைக்கேல் அந்தோணி ஆலோசனைப்படி 18 வயது நிரம்பாத தமிழரசன் மீது பிஜேபி பிரமுகர் ஜெயந்தி கும்பலிடம் பொய்யான ஆவணங்களை தயார் செய்து தமிழரசன் மற்றும் எங்களுக்கு தெரியாத ஒரு நபரை இணைத்து இருவரும் மேற்கண்டவர்களை கெட்ட வார்த்தைகள்  திட்டியதாகவும் கையால் அடித்ததாகவும் தமிழரசன் மற்றும் எங்களுக்கு தெரியாத ஒரு நபர் மீதும் ஏற்காடு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளார்கள். எனவே ஏற்காடு காவல்துறை உதவி ஆய்வாளர் மைக்கேல் அந்தோணி தலைமையில் உள்ள சில பினாமிகள் மூலம் ஏற்காட்டில் உள்ள விடுதி உரிமையாளர்களை மாமுல் கேட்டு மிரட்டி அச்சுறுத்தியும் புகார் கொடுக்க செல்லும் பொது மக்களிடம் கட்டப்பஞ்சாயத்து  செய்தும் பணம் கொடுக்க தவறும் பட்சத்தில் எதிர்மனுதாரிடம் பணம் வாங்கிக்கொண்டு மக்களிடம் புகாரை வாங்காமல் பொய் வழக்கு போடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். எனவே தமிழரசன் மீது பொய் வழக்கு போட்ட வழக்கினை ரத்து செய்து தமிழரசனை  தாக்கிய ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும், ரவுடிகளுக்கு உடந்தையாக இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன்,உதவி ஆய்வாளர் மைக்கேல் அந்தோணி இருவரையும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட வழங்கியும்,தனி புலன் விசாரணைக்கு உட்படுமாறும் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow