தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் கோட்டை மைதானத்தில் , தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில், கடந்த ஓராண்டாக சிறு சிறு பிரச்சனைகளைக் காரணம் காட்டி தொடர்ச்சியாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் செய்யப்படுவதை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சரவணன், தமிழ்ச்செல்வன், செந்தில் குமார், யோகேஸ்வரி, ஆறுமுகம், சந்திரசேகர், அருள்முருகன், இளங்கோவன், ஜமுனாராணி, சுரேஷ், இலியாஸ், அருளானந்தம் மற்றும் சேலம் சங்ககிரி கல்வி மாவட்ட, வட்டார, ஒன்றிய, அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?