ஸ்ரீ கணேஷ் மற்றும் அறிவியல் கல்லூரியில் 18வது ஆண்டு விழா
சேலம் ஸ்ரீ கணேஷ் மற்றும் அறிவியல் கல்லூரியில் 18வது ஆண்டு விழா கொண்டாட்டம்
ஸ்ரீ கணேஷ் மற்றும் அறிவியல் கல்லூரியில் 18வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் தங்கவேல் அவர்கள் தலைமை தாங்கினார்.செயலாளர் விஜய் கணேஷ்,பொருளாளர் செந்தில்குமார் மற்றும் ஸ்ரீ கணேஷ் மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் விமலாதித்தன்,ஸ்ரீ கணேஷ் கல்வியியல் கல்லூரி முதல்வர் குமார்,மற்றும் தங்கவேல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரையுலக நடிகை மிர்ணாலினி ரவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அறக்கட்டளை மூலம் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பல்கலைக்கழக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று திரை உலக நடிகை மிர்ணாலினி ரவி அவர்கள் சிறப்புரையாற்றியும் மாணவர்களுடன் நடனமாடியும் விழாவினை சிறப்பித்தார். மேலும் மாணவர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக தனி நடனம்,குழு நடனம்,பரதநாட்டியம், குரு நாடகம் போன்ற பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
What's Your Reaction?