சேலம் மண்டல அளவிலான மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சேலம் நாமக்கல் ஈரோடு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கங்கள் இணைந்து நடத்தும் சேலம் மண்டல அளவிலான மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் தேவபிரபு, பழனிதுரை, விஸ்வேஜன், பெரியசாமி, வேடியப்பன், முருகேசன் ஆகியோர் கூட்டு தலைமையில் நடைபெற்றது .இதில் மாநில அமைப்பு செயலாளர் மற்றும் சேலம் கல்வி மாவட்ட செயலாளர் இளங்கோ அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் உபரி பணியிடம் பணி நிரவல் செய்தல் சார்ந்து பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகளில் 700 முதல் 1500 வரை மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் 1 உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் 1 உடற்கல்வி இயக்குனர் பணியிடம் என்பன உள்ளிட்ட பல சரத்துக்கள் மாணவர்களின் நலனுக்கு புறம்பாக உள்ளதால் இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட்டு 100 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்பதை செயல்படுத்திட வேண்டும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா உடற் கல்வி பாட புத்தகம் ,விலையில்லா விளையாட்டு சீருடை மற்றும் தரமான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் சசிகுமார் ,பாலச்சந்தர், மாரியப்பன், வாலிஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் தேவி செல்வம், மாநில பொருளாளர் தமிழ்செல்வன், மாநில செயலாளர் இராஜா சுரேஷ், மாநில பொது செயலாளர் பெரியதுரை, மாநில செயல் தலைவர் சீனிவாசன், மாநில செயலாளர் மாயகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் சேலம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஓய்வு இராபர்ட் கிரிஸ்டோபர், சேலம் மாவட்ட செயலாளர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் ஆர்ப்பாட்ட பொறுப்பாளர்கள் பொருளாளர் சுமதி, துணைத் தலைவர் ஆனந்த முருகன், துணை தலைவர் எட்வர்ட்பால் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?



