சேலம் காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக ஒட்டு அறுவை சிகிச்சை

Jun 10, 2024 - 17:40
 8
சேலம் காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக ஒட்டு அறுவை சிகிச்சை

சேலம் காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக ஒட்டு அறுவை சிகிச்சை சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அருகில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் துண்டிக்கப்பட்ட கை அறுவை சிகிச்சை செய்து ஒட்டவைப்பு இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், 26 ஏப்ரல் 2024 அன்று இரவு 11 மணியளவில் சேலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு மணிக்கட்டில் வெட்டுக்காயம் ஏற்பட்டு, அதன் காரணமாக கை துண்டிக்கப்பட்டிருந்தது. விபத்து ஏற்பட்ட இரண்டு மணி நேரம் கழித்து, ஐஸ் பெட்டியில் துண்டிக்கப்பட்ட கையுடன் பாதுகாப்பாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.எலும்பியல் நிபுணர் டாக்டர் அருண் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் நோயாளியை பரிசோதித்து, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது சுமார் 6 மணி நேரம் நீடித்த கை மறு-பொருத்தும் ஒட்டு அறுவை சிகிச்சை (ரீ- ப்லான்டேஷன்) மூலம் நோயாளிக்கு பொருத்தப்பட்டது இந்த சிகிச்சை ஒரு மைக்ரோ-வாஸ்குலர் அறுவை சிகிச்சை ஆகும். இதுகுறித்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ் குமார் பேசுகையில், “விபத்து அல்லது காயத்தின் காரணமாக கைவிரல், கால்விரல், கை, கால் போன்றவற்றின் துண்டிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், எலும்பை சரிசெய்து, மென்மையான திசுக்களை (தசைநார், நரம்பு, ரத்தநாளம் மற்றும் தமனி) சரிசெய்வதன் மூலம் துண்டிக்கப்பட்ட உடற்பகுதியை மீண்டும் பொருத்தும் அறுவை சிகிச்சை (ரீ-ப்லான்டேஷன்) உடனடியாக செய்து நோயாளிகளை காப்பாற்றுகிறோம் என்னுடன் இணைந்து தங்கள் நிபுணத்துவத்தை வழங்கி ஒருங்கிணைந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, நோயாளியின் ஆரோக்கியத்தை மீட்டெடுத்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சேலம் காவேரி மருத்துவமனை மேலும், இந்தச் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் நோயாளிகள், தங்களது துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களை முறையாகப் பாதுகாக்கப்பட்ட சுத்தமான, உலர்ந்த பிளாஸ்டிக் கவரினுள் வைத்து, அதைச் சுற்றி ஐஸ் கட்டிகள் இருக்கும்படியாக ஒரு ஐஸ் பெட்டியில் வைத்து கொண்டு வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்றார். இந்த மருத்துவ சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய குழுவினர் அனைவருக்கும் சேலம் காவேரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ இயக்குனர் டாக்டர் சுந்தரராஜன் மற்றும் மருத்துவ இயக்குனர் டாக்டர் அபிராமி ஆகியோர்களுக்கு நன்றி தெரிவிக்கிறது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow