ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான கான்கிரீட் சாக்கடை, கால்வாய் அமைக்க பூமிபூஜை
சேலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.மலர்கொடி ராஜா தலைமையில் ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான கான்கிரீட் சாக்கடை கால்வாய் அமைக்க பூமிபூஜை
சேலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.மலர்கொடி ராஜா நிதியிலிருந்து வட்ட முத்தாம்பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர் நகர், விநாயகர் கோவில் முதல் மரகதம் வீடு வரை 150 மீட்டர் ரூபாய் ஏழரை லட்சம் மதிப்பீட்டில், இதனைத் தொடர்ந்து காமராஜர் நகர் கோவிந்தன் வீடு முதல் மணிகண்டன் வீடு வரை 5 லட்சம் மதிப்பீட்டில் மற்றும் தலவாப்பட்டி ஊராட்சி ஒன்றிய 15 வது நிதி குழு மானியத்தில் மணி வீடு முதல் காளியம்மன் கோவில் வரை.ரூபாய் ஏழரை லட்சம் மதிப்பீட்டில். வீதியில் கான்கிரீட் சாக்கடை கால்வாய்க்கு பூஜை போடப்பட்டது. சேலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.மலர்கொடி ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வட்ட முத்தாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி கோவிந்தன், வார்டு செயலாளர் செல்வகுமார், கிளைச் செயலாளர் ரமேஷ், கனகராஜ், துரைசாமி, பழனி, காத்தவராயன், சபரி, பிரகாஷ், சந்தோஷ், பொங்காளி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?