நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை சார்பில் தலை காய சிகிச்சை பிரிவு தொடக்கம்
சேலத்தில் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை சார்பில் தலை காய சிகிச்சை பிரிவு தொடக்கம்
நீரோ பவுண்டேஷன் மருத்துவமனை சார்பில் தலைக்காய விழிப்புணர்வு மற்றும் பிரத்தியேக தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம் அழகாபுரத்தில் உள்ள சேலம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூட்டத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நீரோ பவுண்டேஷன் மருத்துவ இயக்குனர் நடராஜன் வரவேற்பு உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டு விலை மதிப்பில்லா உயிர்களை காப்பாற்ற மோட்டார் சைக்கிள் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து பேசினார். கௌரவ விருந்தினராக மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி கலந்துகொண்டு தலைக் காய சிகிச்சை பிரிவை குத்து விளக்கு ஏற்று துவக்கி வைத்தார். நியரோ பவுண்டேஷன் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் நடராஜன் கூறும்போது சேலத்தில் முழுமையான நவீன உயர்நிலை தீவிர தலை காயை சிகிச்சை பிரிவு எங்கள் மருத்துமனை தொடங்கப்பட்டுள்ளது. மூலையில் அழுத்தம், ரத்த ஓட்டம் ஆகியவற்றினை கண்காணிக்கும் கருவிகள், உயர்நிலை வெண்டிலேட்டர் கள், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் இயங்கும் அளவில் எங்கள் மருத்துவமனையில் தயார் நிலை வைத்துள்ளனர். இதற்கு முன்பாக விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வனம் மருத்துவமனை முன்பு தொடங்கி கூட்டுறவு மண்டபம் வரை நடைபெற்றது.
What's Your Reaction?