தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நல சங்கம் சார்பில் மாநாடு மற்றும் 18ஆம் ஆண்டு துவக்க விழா
தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நல சங்கம் சார்பில் சேலம் மாவட்ட அளவிலான மாநாடு
மற்றும் 18ஆம் ஆண்டு துவக்க விழா
தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நல சங்கம் சார்பில் சேலம் மாவட்ட அளவிலான மாநாடு மற்றும் 18ஆம் ஆண்டு துவக்க விழா சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில தலைவர் வாசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கிராமப்புற திருக்கோவில் திருப்பணி நிதி உதவியை 2 லட்சமாகவும், ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு ஊக்கத்தொகையாக 1000ரூபாய் வழங்கியும், 60 வயதுக்கு மேற்பட்ட வயது முதிர்ந்த பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியம் ஆக உயர்த்தி வழங்கியது உட்பட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது. மேலும் இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை திருக்கோவில்களுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும், கிராம கோவில் பூசாரிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பை ஒரு லட்சமாக உயர்த்தி தர வேண்டும், இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களுக்கு சொந்தமான சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இயக்கம் நிலங்களுக்கு நீர் பாசன வசதியை ஏற்படுத்த கோரியும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இம்மாநாட்டில் மாநில செயலாளர் சங்கர், துணை செயலாளர் சிவக்குமார் ,பொருளாளர் சுந்தரம், மாவட்ட தலைவர்கள் ராஜா, ராயதுரை உட்பட நிர்வாகிகள் மற்றும் சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து கிராம கோவில் பூசாரிகள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?