வாசன் கண் மருத்துவமனையில் லேசிக் மெஷின்-திறப்பு விழா.

Dec 10, 2023 - 10:30
 42

வாசன் கண் மருத்துவமனையில் லேசிக் மெஷின்-திறப்பு விழா. சேலம், டிச 09- சேலத்தில் முதல்முறையாக வாசன் கண் மருத்துவமனையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய புத்தம் புதிய லேசிக்ரின் மிஷின் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் திறப்பு விழாவில் சிறப்பு விருத்தினர்களாக சேலம் மாநகராட்சியின் மேயர் இராமச்சந்திரன் விநாயகா மிஷன் எழில்வேந்தன் இரட்டை கிளி அரிசி நிறுவனர் உதயகுமார் ஆகியோ கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர். வாசன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ இயக்குநர் டாக்டர் கமல்பாபு மற்றும் சேலம் தலைமை டாக்டர் செல்வகுமாரி இவர்களின் தலைமையில் இவ்விழா சிறப்பாக நடத்தப்பட்டது. மேலும் வாசன் கண் மருத்துவமனையின் மண்டல செயல் இயக்குநர் திரு.சுந்தரமுருகேசன், திரு.பானுபிரதாப் சிங் திரு வெங்கடேஷ் (மண்டல மேலாளர் திரு.பன்னீர்செல்வம் முத்த பொது மேலாளர்) திரு.தமிழ்செல்வன் (கோவை மண்டல வணிக மேலாளர் மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow