சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் நிலவாரப்பட்டி மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் நிலவாரப்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திமுக கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதில் பொதுமக்கள் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். இதில் பனமரத்துப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் உமாசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் திருமுருகன், துணைத்தலைவர் அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் நடேசன், உதவி ஆணையாளர் சுராஜுதின், கிராம நிர்வாக அதிகாரி சேகர், ஊராட்சி செயலாளர் விவேகானந்தன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?