சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அமானி கொண்டலாம்பட்டி சமுதாய கூடத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திமுக கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் ஒன்றிய துணை சேர்மன் சங்கர், துணைத் தலைவர் சரவணன், தலைவர் தமிழ்மணி, ஊராட்சி செயலாளர் சிவராஜ், வார்டு உறுப்பினர்கள் ஐஸ்வர்யாஅருள், சரவணன், கல்பனா மோகன் மற்றும் கண்ணையன், கிருஷ்ணன், விஜயகுமார், பூபதி, தனபாலன், ரவிராஜ், ராமச்சந்திரன், செல்வம், அருள், முத்து, கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?