அதிமுக சார்பில், "விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-ஏ சாட்சி" பிரச்சாரம் சேலத்தில் தொடங்கியது
அதிமுக சார்பில், "விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-ஏ சாட்சி" பிரச்சாரம் சேலத்தில் தொடங்கியது.
வீடுவீடாக சென்று, திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வை பிரிண்ட் எடுத்து கொடுத்து நூதன விழிப்புணர்வு.
திமுக ஆட்சியில் வீட்டு வரி, மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி என அனைத்து வரிகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. அதேபோல் மளிகை பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டன. இதனால் சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், இந்த விலைவாசி உயர்வை கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த விலைவாசியோடு பொதுமக்கள் ஒப்பிட்டு பார்க்கும் வகையில், அதிமுக சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் "விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-ஏ சாட்சி" என்ன பிரச்சாரம் சேலத்தில் தொடங்கப்பட்டது.
சேலம் மாநகர் மாவட்ட கழகம் மற்றும் மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடைபெற்ற இந்த பிரச்சாரம், மாநகர் மாவட்ட கழக அலுவலகம் அருகில் இருந்து தொடங்கப்பட்டது. மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஏகேஎஸ்எம். பாலு தலைமையில், மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரசண்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தின் போது, குடும்பத் தலைவிகளை நேரில் சந்தித்து அவர்கள் தங்களது வீட்டில் மளிகை பொருட்களுக்கு எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பதையும், அரசுக்கு வரியாக எவ்வளவு செலுத்துகிறார்கள் என்பதையும் பட்டியலிட்டு, அதனை பிரிண்ட் எடுத்து அவர்களுக்கு கொடுத்தனர். அதனைக் கொண்டு 5 ஆண்டு திமுக ஆட்சியில் குடும்பத்திற்கு எவ்வளவு செலவிட்டிருக்கிறார்கள் என்பதை, கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த விலைவாசியோடு ஒப்பிட்டு எவ்வளவு தொகை அதிகமாக செலவிடப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் வட்டக் கழக செயலாளர் சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
What's Your Reaction?



