குடியரசு கல்வி கலைக்கூடம் - ரீபப்ளிக் எஜிகேசன் அகாடமி சேலத்தில் திறப்பு

Feb 2, 2026 - 09:34
 41
குடியரசு கல்வி கலைக்கூடம் - ரீபப்ளிக் எஜிகேசன் அகாடமி சேலத்தில் திறப்பு

குடியரசு கல்வி கலைக்கூடம் - ரீபப்ளிக் எஜிகேசன் அகாடமி சேலத்தில் திறப்பு

சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி பகுதியில் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கட்சியின் சேலம் மாவட்ட அலுவலகத்தில் குடியரசு கல்வி கலைக்கூடம்திறப்பு விழா நடைபெற்றது.

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ரிபப்ளிக் எஜுகேஷனல் அகாடமி என்ற புதிய அமைப்பு துவங்கப்பட்டது. இதில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் குறிப்பாக யுபிஎஸ்சி டிஎன்பிஎஸ்சி வங்கி ரயில்வே இன்சூரன்ஸ் பொதுத்துறை போன்ற வேலைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது மேலும் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான கவுன்சிலிங் பாடமுறை கல்வி தாட்கோ கடன் வசதி அனைத்து வங்கி கடன் வசதி வாகன காப்பீடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் எனவும்,

தற்போது அனைத்தும் தனியார் மையமாக மாற்றப்படுவதால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையை நிலைநாட்டும் போரிட்டு தனியார் பணியிடங்களில் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை எனவும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மற்றும் சாதாரண ஏழை எளிய மக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும்,
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் பயிற்சி மையங்கள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர் மேலும் முதற்கட்டமாக சேலம் கோவை செங்கல்பட்டு மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டுள்ளது எனவும் தொடர்ந்து பயிற்சிகள் வழங்க உள்ளதாக அமைப்பின் நிறுவனர் சகஸ்ராம் ரவி தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow