சேலம் கோட்டை மேல் தெரு புதிய பள்ளிவாசல் திறப்பு
சேலம் கோட்டை மேல் தெரு புதிய பள்ளிவாசல் திறப்பு
சேலம் மாநகரம் கோட்டை மேல் தெரு பகுதியில் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நூறாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளிவாசலை புதுப்பித்து திறப்பு விழா நடைபெற்றது.கட்டடக்கம்பட்டி தலைவர் எம் நாசர் கான் என்கிற அம்மன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். புதிய பள்ளிவாசலை முஸ்லிம் எஜுகேஷனல் சொசைட்டி பொதுச் செயலாளர் கே ஜியாவுதீன் அஹமத் திறந்து வைத்தார் இதில் இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
What's Your Reaction?



