தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு முழு ஆதரவு.... மாநிலத் தலைவர் நாகா ஆர் அரவிந்தன்  அறிவிப்பு

Mar 2, 2026 - 19:00
 15
தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு முழு ஆதரவு.... மாநிலத் தலைவர் நாகா ஆர் அரவிந்தன்  அறிவிப்பு

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு முழு ஆதரவு.... மாநிலத் தலைவர் நாகா ஆர் அரவிந்தன்  அறிவிப்பு.....


சேலம் மார்ச் 02 - தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு மற்றும் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை மாநில தலைவர் நாகா ஆர். அரவிந்தன் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் தற்போது நடைபெற உள்ளது. இதனை எடுத்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய  தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு திமுக தலைமையிலான கூட்டணிக்கு முழு ஆதரவையும் வழங்குகின்றது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு மக்களுக்கு திமுக கொண்டு வந்த எண்ணற்ற திட்டங்களை வீடு தோறும்  கொண்டு சேர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி இமாலய வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின்  ஆட்சிக் கட்டிலில் அமர்வார் அதற்கு தேசிய தெலுங்கு சிறுபான்மையினர் கூட்டமைப்பு உடன் நிற்கும். இவ்வாறு தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow