தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆர் டி ஐ பிரிவு சார்பில் சேலம் அழகாபுரம் மாரியம்மன் கோவில் அருகில் ஆர் டி ஐ பிரிவு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது
ஆர் டி ஐ பிரிவு அலுவலகம் திறப்பு விழா
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆர் டி ஐ பிரிவு சார்பில் சேலம் அழகாபுரம் மாரியம்மன் கோவில் அருகில் ஆர் டி ஐ பிரிவு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த அலுவலக திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர் மற்றும் ஆர்.டி.ஐ. பிரிவு மாநில தலைவர் கனகராஜ், ஆகியோர் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி, காங்கிரஸ் பேரன்பாடி மாநில செயலாளர் வசந்தம் சரவணன், மாவட்ட பொருளாளர் ராஜகணபதி, ஆர் டி ஐ மாநில பொதுச் செயலாளர் முருகன், மாநில துணைத்தலைவர் யாகூப் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கமிட்டி ஆர் டி ஐ பிரிவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவ்விழாவில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், ஆர்டிஐ பிரிவு நிர்வாகிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்
What's Your Reaction?



