சேலம் பள்ளி கல்வித்துறை ஆசிரியர்மற்றும் பயிற்றுநர்கள் செப்டம்பர் மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

Oct 9, 2024 - 09:13
 99
சேலம் பள்ளி கல்வித்துறை ஆசிரியர்மற்றும் பயிற்றுநர்கள் செப்டம்பர் மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம் பள்ளி கல்வித்துறை ஆசிரியர்மற்றும் பயிற்றுநர்கள்
செப்டம்பர் மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
...

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள் ஏனைய அலுவலர்கள் என தமிழக முழுவதும் 32,000 மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர் இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஊதியம் இதுவரை பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால்

 இன்று சேலம் கோட்டை மைதானத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் ஒவ்வொரு மாதமும் இறுதி வேலை நாட்களில் மாத ஊதியத்தை வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து வகை பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்மாவட்ட தலைவர் ரத்தினவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow