சேலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ரூபாய் 5 லட்சம் மதிப்பில் சின்டெக்ஸ் டேங்க் திறப்பு
சேலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ரூபாய் 5 லட்சம் மதிப்பில் சின்டெக்ஸ் டேங்க் திறப்பு
சேலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆங்காங்கே சின்டெக்ஸ் டேங்க் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் அம்மாபேட்டை பகுதியில் 34 ஆவது டிவிசன் உள்ளது. இங்குள்ள திப்பு நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆனால் இங்கு போதிய அளவு சின்டெக்ஸ் டேங்க் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்தது. இதனை அறிந்த சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவரது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, இரண்டு இடங்களில் சின்டக்ஸ் டேங்க் வைக்கவும் ஏற்பாடு செய்தார் . இதனையடுத்து துப்பு நகர் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டது, இதனை இன்று காலை சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்கள் குடிநீர் எடுத்துச் செல்ல திறந்து வைக்கப்பட்டது. இதன் பிறகு இந்த பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து குடிநீர் பிடித்துச் சென்றனர். இதுபோல மேலும் சில சின்டெக்ஸ் டேங்க் திப்பு பகுதியில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 34-வது டிவிஷன் கவுன்சிலர் ஈசன் இளங்கோ தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் அம்மாப்பேட்டை மண்டலகுழு தலைவர் கே.டி.ஆர்.தனசேகரன். அரிசிப்பாளையம் பகுதிக்கழக செயலாளர் மணமேடு மோகன், 34- வது கோட்டக்கழக செயலாளர் வீ.குணசேகரன் மற்றும் திரளான நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?