சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் உயர்நிலை வலிப்பு சிறப்பு சிகிச்சை மையம்
சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையில்
உயர்நிலை வலிப்பு சிறப்பு சிகிச்சை மையம் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், மற்றும் டாக்டர் சதீஷ்சந்திரா தொடங்கி வைத்தனர்.
சேலம் நியூரோ பவுண் டேஷன் மருத்துவமனையில் உயர்நிலை வலிப்பு சிறப்பு சிகிச்சை மையத்தை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், டாக்டர் சதீஷ்சந்திரா தொடங்கி வைத்தனர்.சேலம் 3 ரோட்டில் உள்ள நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் உயர்நிலை வலிப்பு சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுஉள்ளது.அதன் தொடக்க விழா சேலம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஆர்.நடராஜன் வரவேற்புரை ஆற்றினார்.அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி டீன் மணி, நரம்பியல் துறை தலைவர் சிவகுமார்,டாக்டர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு வலிப்பு நோய்குணமாக்குவது குறித்து விளக்கம் அளித்து பேசினர்.சிறப்பு அழைப்பாளர்க ளாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம்,பெங்களூரு நிம்மான்ஸ் மருத்துவமனை இயக்குனர் சதீஷ் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு உயர்நிலை வலிப்பு சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்து பேசினர்.
மூளை நரம்பியல் பிரச்சினை நியூரோ பவுண்டேஷன்மருத்துவமனை இயக்குனர் ஆர்.நடராஜன் கூறியதாவது:- மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய மூளை நரம்பியல் பிரச்சி னைகளில் தலைவலிக்கு அடுத்த படியாக வலிப்பு நோய் அதிகம் பேரை பாதிக்கிறது.பொதுவாக அறியாமையால் வலிப்பு வந்தவர்களுக்கு சாவி, கூர்மையான இரும்பு பொருட்களை கையில் கொடுப்பதுடன்,கை,கால் களை அழுத்தி பிடித்து,வாயில் தண்ணீர் கொடுத்தால் வலிப்பு நின்று விடும் என்ற மூட நம்பிக்கையை மக்கள் கொண்டு உள்ளனர்.இதனால் வலிப்புக்கான முறையான விஞ்ஞான பூர்வமான சிகிச்சைகள் கிடைக்காமல் வலிப்புடனேயே மக்கள் வாழ்கின்றனர்.இதனால் அவர்களது வாழ்க்கையில் படிப்பு.திருமணம்,குழந்தைப் பேறுபோன்றவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது.வலிப்பு பற்றிய போதிய விழிப்புணர்வு இன்றி தவறான புரிதல்களால் வலிப் புக்கான முறையான சிகிச்சை கள் கிடைக்காமல் உள்ளது.
நமது நாட்டில் நரம்பியல் மருத்துவ அறிவியல் துறை யில், வலிப்பு பற்றிய ஆய்வுகள். வலிப்புக்கான சிகிச்சைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.புதிய மருந்துகள்,வலிப்புக்கான மூளை அறுவை சிகிச்சைகள், வலிப்புகான பிரத்தியேக மூளை ஸ்கேன் போன்றவற்றின் மூலம் வலிப்பு நோயை முழுமையாக குணப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.எனவே இத்தகைய உயரிய முறையான சிகிச்சைகள் அனைவருக்கும் கிடைக்க தமிழகத்தில் முதல் முறையாக உயர்நிலை வலிப்பு சிறப்பு சிகிச்சை மையம் சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளன.வலிப்பு என்பது அறிவியல்பட்டு உள்ளன. கூற்றுப்படி மனிதர்களின் மூளையில் திடீரென ஏற்படும்,என்று கூறினார்.முடிவில் டாக்டர் நிஷா மோள் நன்றி கூறினார்.
What's Your Reaction?