தமிழகம் முழுவதும் செப்டம்பர் 2024 மாதத்திற்கான ஊதியம் இந்நாள் வரை வழங்கப்படவில்லை

Oct 7, 2024 - 14:36
 224
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 2024 மாதத்திற்கான ஊதியம் இந்நாள் வரை வழங்கப்படவில்லை

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 2024 மாதத்திற்கான ஊதியம் இந்நாள் வரை வழங்கப்படவில்லை

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சேலம் மாவட்டத்தில் 21 வட்டாரத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள், கட்டிட பொறியாளர்கள், கணக்காளர்கள், கணினி விவர பதிவாளர்கள் உள்ளிட்ட அனைத்து சமக்ரா சிக்க்ஷா திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். 

இவர்கள் அனைவருக்கும் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 2024 மாதத்திற்கான ஊதியம் இந்நாள் வரை வழங்கப்படவில்லை. 

மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று மாநில அரசு ஊழியர்களுக்கு  இந்நாள் வரை ஊதியம் வழங்கப்படவில்லை.

இதனால் அனைத்து ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது இவர்களின் அடிப்படை தேவையாகளான வாடகை, உணவு, மருத்துவம், குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழலை எதிர்த்து உடனடியாக ஊதியம் வழங்கக்கோரி தமிழக முழுவதும் உள்ள அனைத்து வட்டார வளமைய பணியாளர்களும் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனர். இன்றும் ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் நாளை மாலை மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட திட்டமிட்டுள்ளனர் என்று  சேலம் மாவட்ட அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் திரு.P.ரத்தினவேல் அவர்கள் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow