நாலெட்ஜ் பொறியியல் கல்லூரிக்கு மலேசியா இன்டி சர்வதேச பல்கலைகழக சார்பு துணை வேந்தர் வருகை
நாலெட்ஜ் பொறியியல் கல்லூரிக்கு மலேசியா இன்டி சர்வதேச பல்கலைகழக சார்பு துணை வேந்தர் வருகை!
சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி மலேசியாவில் உள்ள இன்டி சர்வதேச பல்கலைகழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் அடிப்படையில் மலேசியா இன்டி சர்வதேச பல்கலைக்கழக சார்பு துணை வேந்தர் முனைவர். கோ ஹாங் வெண் அவர்களும், பேராசிரியர் முனைவர் அரசுராமன், நாலெட்ஜ் பொறியியல் கல்லூரிக்கு வருகைப் புரிந்து கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
சிறப்பு விருந்தினர் முனைவர் கோ ஹாங் வெண்,முனைவர் அரசுராமன், இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி, இன்டி சர்வதேச பல்கலைக்கழகத்துடன் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை அனுப்பி புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும்.நவீன தொழில்நுட்பங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும். வெளிநாடுகளில் உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி முறைகளை அறிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் கல்லூரி மாணவர்கள் ஒரு செமஸ்டர் முழுமையாக அப்பல்கலைக்கழகத்தில் தங்கி பயில ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.இந்
நிகழ்ச்சியில் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் நிறுவனர். தலைவர் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் சீனிவாசன், செயலாளர் முனைவர் குமார், பொருளாளர் சுரேஷ்குமார், துணைமுதல்வர் முனைவர் விசாகவேல், மற்றும் அனைத்து துறை இயக்குநர்கள், தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?