நகரத்தார் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

Mar 27, 2024 - 10:16
 38
நகரத்தார் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

சேலம் நகரத்தார் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

சேலம் நகரத்தார் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்டம் தொடக்க விழா சங்க கட்டிடமான செட்டிநாடு மஹாலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு டாக்டர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். இதில் சோனா கல்விக் குழுமம் சேர்மன் வள்ளியப்பா, கமலா சினிமாஸ் வள்ளியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கர்நாடகா நகரத்தார் சங்க துணை தலைவர் ரவி வீரப்பன் பாராட்டுரை வழங்கினார். இதில் மக்கள் கவிஞர் நாகப்பன் சிறப்புரையாற்றினார். மேலும் பல்வேறு நகரத்தார் சங்க தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் தலைவர் மோகன் என்கிற பழனியப்பன், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் அருணாசலம், துணைத் தலைவர்கள் லட்சுமணன், நாச்சியப்பன், இணை செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சேலம் நகரத்தார் சங்க செயலாளர் விஸ்வநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள், சேலம் நகரத்தார் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow