ஜுவல் ஒன் நகைக்கடையில் திருமண கால நகைகள் அறிமுக விழா

Jan 14, 2024 - 14:47
 45


சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜுவல் ஒன் நகைக்கடையில் திருமண கால நகைகள் அறிமுக விழா இன்று நடைபெற்றது இந்த விழாவில் மாவட்ட காவல் அதிகாரி லோகநாதன் மற்றும் கடையின் முக்கியவாடிக்கையாளர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்

தொடர்ந்து திருமண கால நகைகள் கண்காட்சியினை காவல் அதிகாரி திறந்து வைத்தார் புதிதாக துவக்கப்பட்டுள்ள திருமண கால நகை கண்காட்சியில் நிச்சயதார்த்தம் பெண் அழைத்தல் முகூர்த்தம் மற்றும் அதற்குப் பிறகு நடைபெறும் திருமண நிகழ்வுகள் போன்ற அனைத்து வகையான நகைகளும் ஒவ்வொரு விசேஷங்களுக்கும் பல்வேறு வகையான நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 

குறிப்பாக 9.16 அரசு அனுமதித்துள்ள தரத்தை அதிகரித்து 91.75 தரத்துடன் புதிய வடிவிலான நகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது முற்றிலும் தற்போதைய காலகட்டத்தில் ட்ரெண்டிங் டிசைன்கள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளது 

மேலும் நகைகளை பதியப்படும் ஸ்டோன் மற்றும் எனாமல் பிரத்தியோக முறையில் வடிவமைக்கப்பட்டு எங்கும் கிடைக்காத டிசைன்களில் நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 

குறிப்பாக தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சிஅம்மன் கோபுரத்தின் தத்துரூபமான வடிவத்தில் 700 கிராம் எடை கொண்ட கோபுரம் கழுத்தில் அணியும் அணிகலன்களாக செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது 

இதனை ஏராளமானோர் வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருமண கால நகை வகைகளை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதாகவும் வருகின்ற 31 ஆம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் நகை வாங்கும் அனைவருக்கும் நல்ல தரமான சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜுவல் ஒன் நிறுவனத்தின் தலைமை தொடர்பு அதிகாரி ஆண்டனி தெரிவித்துள்ளார் 

இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் கூறும் போது ஜுவல் ஒன்  இந்திய அளவில் மிகப்பெரிய நகை தயாரிக்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஜுவல் ஒன் நகைக்கடையில் பிரத்தியோக வடிவமைப்புகள் அதிகம் அளவில் உள்ளது இந்த நகைகளை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்வதாக தெரிவித்தார் 

நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் நகைகளை வாங்க வேண்டும் என்பதற்காக குறைந்த எடையில் பார்ப்பதற்கு அழகாகவும் பெரிதாகவும் நேர்த்தியான டிசைன்களில் திருமண நகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow