பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புதலைவர்,செயலாளர் கூட்டம்
சேலம் சௌடாம்பிகை ஓட்டலில் உள்ள கூட்ட அரங்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புதலைவர்,செயலாளர் கூட்டம் நடைபெற்றது.
மாநில வன்னியர் சங்க செயலாளர் மு.கார்த்தி தலைமையில் நடைபெற்றது. மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் வழக்கறிஞர். விஜயராசா, இராஜசேகரன், செல்வக்குமார், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்கள் இராசரத்தினம், முருகேசன், முத்துசாமி, மாணிக்கம், ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் குணசேகரன், மாவட்ட அமைப்பு செயலாளர் கௌளத்தூர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்கண்ட கூட்டத்தில் மாநில அமைப்பு தலைவர் கடலூர் தாமரைகண்ணன், மாநில அமைப்பு செயலாளர் தர்மபுரி சண்முகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட அமைப்பு தலைவர்கள் இராஜமூர்த்தி, குமார், தொப்பாகவுண்டர், மாவட்ட அமைப்பு செயலாளர்கள் செவ்வை அன்புகரசு, செல்வம், இராஜேந்திரன், சேகர் உள்பட நிர்வாகிகள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் கலந்தாய்வு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தமிழினப் போராளி மருத்துவர் அய்யா ,பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மரு.அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற உறுப்பினர், கெளவரத்தலைவர் ஜி.கே.மணி ஆகியோரது ஆலோசனைப்படி நடந்த. சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான அமைப்பு செயலாளர் மற்றும் தலைவர்கள் செயல்திட்ட கலந்தாய்வு கூட்டத்தில் பாமகவின் கொள்கைகளை திறம்பட, உறுதிபட கடலுார் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் அமைப்புகளை கட்டமைப்போம் என இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது,
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் மிக துல்லியமாக கட்டமைப்பை ஆய்வு செய்து, கிளைகள், மைப்புகள் இல்லாத பகுதிகளில் புதிய நிர்வாகிகளை பொறுப்பில் அமர்த்தி, பா.ம.கவின் கட்சி பணிகளை வலுப்படுத்த வேண்டுமென்று பல்வேறு விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
What's Your Reaction?