சேலம் நாலெட்ஜ் பொறியல் கல்லூரியின் 14 வது ஆண்டு விழா
சேலம் நாலெட்ஜ் பொறியல் கல்லூரியின் 14 வது ஆண்டு விழா
சேலம் நாலெட்ஜ் பொறியல் கல்லூரியின் 14 வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் சி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் செயலாளர் ஆர். குமாரசாமி மற்றும் பொருளாளர் வி. சுரேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை எம்பஸிஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறையின் தலைவர் எம். டி. ஜோஸ்வா டேவிட் மற்றும் சேலம் சி சேஷாஸ் சர்வதேச பள்ளியின் தலைவர் கே. பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு ஆண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
கல்லூரி
நிர்வாகம் மற்றும் முதல்வர் முனைவர் பி. எஸ். எஸ் சீனிவாசன் கல்லூரியின் ஆண்டு அறிக்கை வாசித்தார். மேலாண்மை துறையின் இயக்குனர் முனைவர் எ. ஸ்டீபன் மேலாண்மை துறை மாணவர்களின் சாதனைகளை எடுத்துரைத்தார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கே. விசாகவேல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகள் தொகுத்து வழங்கினார். கடந்த கல்வி ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டன. பின்னர் மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. விழாவில் நாலெட்ஜ் அறக்கட்டளை உறுப்பினர்கள், அனைத்து துறை தலைவர்களும், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
What's Your Reaction?