ஸ்ரீ சின்ன மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்

Apr 13, 2023 - 09:07
Apr 13, 2023 - 09:21
 23
ஸ்ரீ சின்ன மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்

சேலம் கொழிஞ்சி பட்டி அருள்மிகு ஸ்ரீ சின்ன மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு
ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. 

இவ்விழாவில் திமுக சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இவ்விழாவில் ஏற்பாட்டினை அண்ணனின் விழுதுகள் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சி பாரப்பட்டி கந்தசாமி நினைவு கலையரங்கத்தில் நடைபெற்றது. 

இதில் பாரப்பட்டி சுரேஷ் குமாருக்கு வெள்ளியில் வீரவால் வணங்கி அவரை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக ரியல் எஸ்டேட் எஸ். சேகர் வரவேற்பு உரையாற்றினார், திமுக பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் உமாசங்கர் கலையரங்கத்தில் திறந்து வைத்தார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லட்சுமி பழனிச்சாமி குத்து விளக்கு ஏற்றி வைத்தார், ரியல் எஸ்டேட் நாழிகல்பட்டி முத்துமாணிக்கம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார், 

இதில் திமுக கிளைச் செயலாளர் எஸ். பி. கூத்தன் மற்றும் ஊர் பொதுமக்கள் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் திமுக ரியல் எஸ்டேட் மாஸ்டர் என். கே. தியாகராஜன் நன்றி உரையாற்றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow