ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் நவீன மூளை மற்றும் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு துவக்க விழா
ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் நவீன மூளை மற்றும் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு துவக்க விழா
சேலம், இன்மெய்யனூர் மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் நவீன மூளை மற்றும் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு துவக்க விழா நடைபெற்றது.
ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் நவீன மூளை மற்றும் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு துவக்க விழா நிகழ்ச்சியில் சேலம், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர். ஜெகந்நாதன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்கள் தலைவர் சீனிவாசன் மற்றும் சேலம் வைசியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி & ஸ்ரீ நரசுஸ் காபி நிறுவனங்கள் தலைவர் திரு சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் அர்த்தநாரி அவர்கள் கூறியதாவது : இன்றைய காலகட்டத்தில் மருத்துவ புள்ளி விவரங்கள்படி தேசிய அளவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 180 பேரும் தமிழகத்தில் 140 பேருக்கும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தீவிர சிகிச்சை கிடைக்கப் பெறாமல் தோராயமாக 50 சதவீதம் பேர் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். மேலும் மூளை இரத்தக் குழாய் வீக்கம், தீவிர தலைக்காயங்கள், வலிப்பு வியாதிகள், சுய நினைவு இழப்பு, மூளைக் காய்ச்சல் மற்றும் தசை வியாதிகள் போன்றவற்றால் நரம்புகள் செயலிழப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நமது ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் அனைத்து மூளை மற்றும் நரம்பு நோய்களுக்கான தீவிர சிகிச்சை பிரிவு துவக்கப்பட உள்ளது. இப்பிரிவில் மூளை உள் அழுத்தம் கண்காணிப்பு கருவிகள், கரியமில வாயு அளக்கும் கருவிகள், மூளை மின்னலை வரைவு, ரத்த சுத்திகரிப்பு மற்றும் பிளாஸ்மா மாற்று கருவிகள் போன்ற வசதிகள் உள்ளன. மூளை ரத்தக்குழாய் உள்நோக்கி அரங்கு மற்றும் நவீன மைக்ரோஸ்கோப் கொண்ட அறுவை சிகிச்சை அரங்கு ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இப்பிரிவில் முழு நேரப் பணியில் அனுபவமிக்க நரம்பியல் மருத்துவர்கள், மூளை அறுவை சிகிச்சை மருத்துவர்கள், கதிரியக்க வல்லுனர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், பேச்சு பயிற்சி மற்றும் முட நீக்கு நிபுணர்கள் பணியாற்றுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
What's Your Reaction?