சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
தலைப்பு- தற்கொலை - பொருளாதாரம், சமூகம், அரசியல் மற்றும் சட்ட ரீதியான தாக்கங்கள்
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் தேசிய அளவிலான “தற்கொலை - பொருளாதாரம், சமூகம், அரசியல் மற்றும் சட்ட ரீதியான தாக்கங்கள்” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கல்லூரியின் விழா அரங்கத்தில் துவங்கியது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சினேஹா அறக்கட்டளையின் நிறுவனரும், மனநல துறை தலைவரும், தன்னார்வ சுகாதார சேவைகள், அடையாறு, சென்னை, மனநல மருத்துவருமான லக்ஷ்மி விஜயகுமார் , மனநல ஆலோசகரும் தரு மருத்துவமனையின் தலைவருமான மருத்துவர். மோகன்ராஜ் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் தலைமையுரையை கல்லூரியின் தலைவரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் இணைத்தலைவருமான த.சரவணன் தனது உரையில், இப்போதைய சூழலில் மாணவர்களில் பலர் NEET போன்ற பல்வேறுவிதமான போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளமுடியாமல் அவர்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தற்போது அதிகரித்து வருகிறது.
மேலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய உலக பிரபலங்களில் சிலர் தங்களின் வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள் மற்றும் ஏமாற்றங்களை தாங்கிகொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று கூறி அதைப்போல மாணவர்கள் மீது பெற்றோர்கள் தங்கள் எண்ணங்களை திணிக்காமல் அவர்களின் திறமையை வெளிபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இன்றைய சூழலில் பல போதை பழக்கத்திற்கும் மற்றும் சமூக ஊடகம் போன்ற பலவற்றில் மாணவர்கள் தங்களை அடிமையாக்கி கொண்டு அவர்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உருவாகிறது. இந்த எண்ணத்திலிருந்து மாணவர்கள் தங்களை எப்படி மீட்க வேண்டும் என்றும் விரிவாக தனது தலைமை உரையில் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் விரிவான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக இயக்குனர் எ. மாணிக்கம், டீன் டாக்டர்.டி.என்.கீதா, கல்லூரியின் முதல்வர் பேகம் பாத்திமா செய்திருந்தனர். இவ்விழாவிற்கான நன்றியுரையை கல்லூரியின் பேராசிரியை நீராஜா கூறினார்.
What's Your Reaction?