செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
சேலம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில், 35வது ஆண்டாக பள்ளி கல்லு£ரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கப்பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தலைவர் சடையப்பன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பி.பி.ராஜகோபால் வரவேற்றார். பொருளாளர் நக்கீரன் ஆண்டறிக்கை வாசித்தார். கோல்டன் தங்கவேல், லோகநாதன், செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு, கல்வி உதவித்தொகை வழங்கினார். சடையப்பன், மகாலிங்கம், தாரை குமரவேலு, டாக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.