நரேந்திர மோடி 74 வது பிறந்த நாளில் 4000 பேருக்கு நலத்திட்ட உதவி

Sep 19, 2024 - 13:51
Sep 19, 2024 - 13:55
 13
நரேந்திர மோடி 74 வது பிறந்த நாளில் 4000  பேருக்கு நலத்திட்ட உதவி

பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் 74வது பிறந்தநாள் விழா சேலத்தில் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் லியோ பப்ளிக் சேரிடபுள் டிரஸட் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் திரு. ஆர்.பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாரதியஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.திரு.கே.பி இராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 4000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தள்ளுவண்டிகள், தையல் இயந்திரம், தலைக்கவசம், மளிகை பொருட்கள், சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சிறந்த ஊராட்சிகளுக்கான விருது வழங்கி கௌரவித்த திரு.கே.பி இராமலிங்கம், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டுமே பாஜக எதிர்க்கிறது. அவரின் மது ஒழிப்பு, பெண் விடுதலை போன்ற கொள் கைகளை பாஜக ஏற்றுக்கொள்கிறது. மத்திய கல்விக் கொள்கையில் எந்த தவறும் கிடையாது. மும்மொழிக் கொள்கை அனைவரும் ஏற்கும் வகையில் தான் உள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நல்ல வழியில் போனால் நிச்சயம் பாராட்டுவோம். தவறான வழியில் போனால் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள். மது விலக்குக்காக விடுதலை சிறுத்தை கள் நடத்தும் மாநாட்டை பாஜக வரவேற்கிறது. இந்த மாநாட்டில் திமுக கலந்து கொள்வதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பது திருமாவளவனை அவமதிப்பதோடு, மக்களை ஏமாற்றும் செயல். முதல்வரின் இயலாமைகாரண மாகவே உதயநிதியை துணை முதல் வராக்க நினைக்கிறார்கள். என கூறினார். நடைபெற்ற விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow