அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் ஆறாவது மாநாடு

Mar 26, 2023 - 21:04
 19

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆறாவது மாநில மாநாடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆறாவது மாநில மாநாடு இரண்டு நாள் மாநில மாநாடு தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் கடந்த 01.09.1998 முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் பணியில் இறந்த தொழிலாளர்களின் வாரீசுதாரர்கள் சுமார் 87,000க்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். போக்குவரத்துக் கழக தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் அமுலுக்கு வந்து ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆகியும் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர். குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வித மருத்துவ உதவி திட்டமோ, மருத்துவக் காப்பீட்டு திட்டமோ இன்றி முதுமையின் காரணமாக மருத்துவ செலவை ஈடுகட்ட மிகச் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அரசு ஊழியர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக சட்டசபையில் சென்ற ஆண்டு சட்டமன்ற கூட்டத்தில் இது போன்ற ஒரு காப்பீட்டு திட்டம் அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் கொண்டு வரப்படும் என மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களின் அறிவிப்பையொட்டி 27.12.2013 தேதியிட்ட அரசாணை எண். 462, நிதி (ஓய்வூதியம்) வெளியிடப்பட்டது. எனவே எவ்வித மருத்துவ உதவி திட்டமோ, மருத்துவ காப்பீட்டு திட்டமோ இன்றி முதுமையின் காரணமாக மருத்துவ செலவை ஈடுகட்ட மிகச் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ள போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அறிவித்த அரசாணை எண்.222 நிதித்துறை, நாள் 30.06.2018ன் படி மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் குடும்ப ஓய்வூதிய நிதி ரூ.50,000/- வழங்கும் திட்டத்தையும் அமுல்படுத்த வேண்டும் என மாண்புமிகு முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்வதென இப்பேரவை தீர்மானிக்கிறது.            தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 1998 ஆம் ஆண்டு முதல் பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பென்சன் திட்டம் பல்வேறு குறைபாடுகளுடனும், குளறுபடிகளுடனும் செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள குறைகளை நீக்கி சரி செய்ய வேண்டுமென வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

 இறுதியாக கடந்த 01.09.2010ல் ஏற்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களின் பென்சன் சம்பந்தமாக ஒரு குழு அமைத்து மூன்ற மாத காலத்தில் சரி செய்யப்படும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி தமிழக அரசு தொழிற்சங்க நீர்வாகிகள் கழக அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் ஆகியவர்களைக் கொண்ட பென்சன் சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டது. மேற்படி பரிந்துரையில் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி இனிமேல் பென்சன் டிரஸ்ட் மூலம் பென்சன் வழங்க இயலாது என்றும். பென்சன் வழங்கும் பொறுப்பை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. எனவே தமிழக அரசு பென்சன் சீரமைப்புக்குழுவின் பரிந்துரையை ஏற்று ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அரசே பென்சனுக்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்" என்று இந்த பேரவை தமிழக அரசையும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.         ஓய்வூதியம் பெறுபவரோ அல்லது பணிக்காலத்தில் இறந்தவரோ அவரது வாரிசுகள் குடும்ப ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களைப் பெற்று சமர்ப்பிக்க பல்வேறு காரணங்களால் தாமதமாகிறது. அப்படி ஏற்படும் தாமத காலத்திற்கான நிலுவைத் தொகையை ஓய்வூதியம் வழங்கும் மாதத்திலேயே வழங்குவதில்லை. ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து அதன் பிறகே வழங்கப்படுகிறது. கணவரை இழந்து எந்தவித வருமானமும் இன்றி சிரமப்படும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு உடனே வழங்குவதான் உதவிகரமாக இருக்கும். குறிப்பாக 2016, 2017, 2021,2022 ஆண்டுகளுக்கான நிலுவைத்தொகையும் இடைப்பட்ட ஆண்டுகளில் சிலருக்கும் வழங்கப்படாமல் உள்ளது. எனவே கழக நிர்வாகங்களும், ஓய்வூதிய நம்பகமும் குடும்ப ஓய்வூதியர்களின் நிலுவைத் தொகைகளை உடனே வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இம்மாநாடு கோருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow