வேங்காம்பட்டியில் ஸ்ரீ பூவாயம்மன் பண்டிகையொட்டி 32ம் ஆண்டு நட்சத்திர கலைவிழா
14.04.2023ல் வெள்ளிகிழமை இரவு மல்லூர் வேங்காம்பட்டியில்
ஸ்ரீ பூவாயம்மன் பண்டிகையொட்டி 32ம் ஆண்டு நட்சத்திர கலைவிழா
திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி பங்கேற்பு. சேலம் மாவட்டம் மல்லூர் வேங்காம்பட்டி ஸ்ரீ பூவாயம்மன் திருவிழாவையொட்டி 14.04.2023 வெள்ளி கிழமை இரவு அம்மன் கலையரங்கில் மரகத நாணயம், சார்லி-சாப்னி-2, தேவ், கோ-2, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன், புகழ் பட திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி நட்சத்திர கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் வேங்கை அய்யனார் தலைமை வகித்து வேதவிகாஸ் பள்ளி குழுமம் எஸ்.பி.முருகேசன் ஆர்கனி இந்திய (பி) லிமிடெட் பெரியசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்ற டாக்டர் செந்தில், கே.எம்.பி. யூசுப்பாட்ஷா, நடிகை நிக்கி கல்ராணி நட்சத்திர கலை நிகழ்ச்சி துவக்கி வைத்துப் பேசுகிறார்கள்.
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவலிங்கம் மாவட்ட துணை செயலாளர் வக்கில் பாரப்பட்டி சுரேஷ்குமார், பனமரத்துப்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் உமாசங்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு பேசுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் வேங்கை அய்யனார் செய்து உள்ளார்கள்.
What's Your Reaction?