வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Mar 26, 2023 - 21:09
 43

உலக வலிப்பு நோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை மற்றும் சேலம் மாநகர காவல் துறை சார்பில் வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

உலக வலிப்பு நோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை மற்றும் சேலம் மாநகர காவல் துறை சார்பில் வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது சேலம் 3 ரோடு அருகில் உள்ள நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை அருகில் தொடங்கி திருவாக்கவுண்டனூர் , 5 ரோடு, அஸ்தம்பட்டி வழியாக 8 கிலோமீட்டர் கடந்து சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தை அடைந்தது. இப்பேரணியை சேலம் மாநகர உதவி ஆணையாளர் சரவணகுமரன் , நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை இயக்குனர் டாக்டர்.நடராஜ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மைதானத்தில் நடைபெற்ற விழாவில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வலிப்பு நோய் பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார்.இந்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இப்பேரணியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜராஜன்,மருத்துவமனை மருத்துவர்கள்,நிர்வாக அலுவலர்கள்,  ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow