சேலம் சண்முகா மருத்துவமணை வளாகத்தில் மகளிர் தின விழா
சேலம் சண்முகா மருத்துவமனை வளாகத்தில்,சண்முக மருத்துவமனை,ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை,கொடுமுடி உதய நிலவு கலைக்கூடம் ஆகியோர் இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கவிதை நூல்கள் திறனாய்வு, பட்டிமன்றம்,மகளிர் தின விழா,என முப்பெரும் விழா நடைபெற்றது.கவிதை தூல்கள் திறனாய்வு,பட்டி மன்றம் (பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணம் பயிற்சியா ? முயற்சியா?), சர்வதேச மகளிர் தினவிழா ஜான்சி ராணி விருது வழங்கும் விழா.சிறந்த சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள்,செவிலியர்கள், ஆசிரியர்கள்,சமூக சேவை செய்பவர்கள்,பெண் தொழில் அதிபர்கள் 100 பேரை தேர்வு செய்து ஜான்சிராணி விருது வழங்கப்பட்டது.சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றி தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் விழா தொடங்கப்பட்டது.மருத்துவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர் கர்லின் ஏ பி வரவேற்புரையாற்றினார். காவல்துறை டி.ஐ.ஜி ராஜேஸ்வரி அவர்கள் விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்கள் காவல்துறை டெப்டி கமிஷனர் மாடசாமி,சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி,லதா,வளர்மதி, எப்சி ஷ்வர்னா,பிரபு, பிரியதர்ஷினி,ஜெயலட்சுமி, ராஜேஸ்வரி,மகளிர் தினத்தின் சிறப்பை பற்றி அனைவருக்கும் பயனுள்ள வகையில் பேசி விருதினை வழங்கினார்கள். கவிஞர் உதய நிலவு நன்றி உரையாற்றினார்.
What's Your Reaction?