தி ஐ.பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி
சேலம்
உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு தி ஐ.பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில்
விழிப்புணர்வு மனித சங்கிலி
சேலம் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மற்றும் செயின்ட் மாணவியர்கள் போனி ஒயிட் நர்சிங் கல்லூரியின் இணைந்து உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு விழிப்பு
ணர்வு மனித சங்கிலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் நடைபெற்றது . இதனை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் அஸ்வின் ஷெஹி தொடங்கிவைத்தார்கள் . இது குறித்து மருத்துவர் அஸ்வின் ஷெஹி கூறியதாவது " 2013 ஆம் ஆண்டில் , உலகளவில் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64.3 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது . இது 2020 ஆம் ஆண்டில் 80.0 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது , 2040 இல் 111.8 மில்லியனாகவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது . இதில் 2.1 மில்லியன் மக்கள் குளுக்கோமாவால் கண் பார்வை இழந்து உள்ளார்கள் .40 வயதிற்கு மேற்பட்ட சுமார் 12 மில்லியன் இந்தியர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு இந்தநோயால் 12.8 சதவீதம் கண்பார்வையை இழக்க வாய்ப்புள்ளது . இந்தநோயால் பாதிக்கப்பட்ட 90 % மேற்பட்டோருக்கு , இந்நோய்பற்றி தெரிவதில்லை , ஆரம்ப நிலையில் இந்நோய் உள்ளதா என்பதை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் பார்வை பறிபோவதை தடுக்கலாம் இந்தநோயால் 40 வயதிற்கு மேற்பட்டோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் 40 வயதிற்கு மேற்பட்டோர் செய்வது அவசியம் , சேலம் தி ஐ வருடம் ஒருமுறை கண் பரிசோதனை பவுண்டேஷன் கண் மருத்துவமனை பொதுமக்களின் கண் நலனுக்காக மார்ச் கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை மாதம் முழுவதும் இலவச வழங்கப்படும் " என்றார் . இந்த விழிப்புணர்வு மனித சங்கிலி சேலம் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை விழித்திரை மருத்துவர் சுரேஷ்பாபு , மருத்துவர்கள் ராஜஸ்ரீ செந்தில் , மார்க்கெட்டிங் மேனேஜர் மேனேஜர் ஆண்ட்ரியோ ஜோஸ் கோவிந்தசாமி மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஊழியர்கள் செயின்ட் போனி ஒயிட் நர்சிங் கல்லூரியின் முதல்வர் பிரேமலதா 200 க்கு மேற்பட்டோர் மாணவியர்கள் கலந்து கொண்டனர் .
What's Your Reaction?