நிலத்தை அபகரிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்
நிலத்தை அபகரிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.
சேலம் மாவட்டம் வலசையூர்பனந்தோப்பு குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் தனது குடும்ப செலவிற்காக இப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான 1.42 ஏக்கர் நிலத்தை காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த அருள் என்பவர் மூலமாக அடமானம் வைக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவுத்துறையில் 82 செண்டு நிலத்தை மட்டும் ரவிச்சந்திரன் என்பவருக்கு 49 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு கிரையம் கொடுக்கப்பட்டது, மேலும் பணத்தை திருப்பித் தரும்போது உரியவருக்கே மீண்டும் கிரயம் செய்து வைப்பதாக கூறி பணத்தை வழங்கியுள்ளனர்.
மேலும் அருள் என்பவர் தனக்கு 27 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது, அதற்கு 100 ரூபாய்க்கு 80 பைசா வட்டி வீதம் கட்டி விடுவதாகவும் வாங்கியுள்ளார்.நிலத்தை அடமானம் வைத்தவர்கள் தற்போது பணத்தை தயார் செய்து விட்டு நிலத்தை கிரையம் செய்து கொடுக்கப்பட்ட ரவிச்சந்திரன் இடம் சென்று பேசியுள்ளனர். அப்போது அவர் சேலத்தை சேர்ந்த தனசேகர் என்பவரிடம் நிலத்தை விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
தங்கள் நிலத்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்குமாறு ரவிச்சந்திரனிடம் கேட்டபோது தங்களை அச்சுறுத்தும் வகையில் பேசியும் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டலும் விடுப்பதால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மணிவண்ணன் குடும்பத்தினர் புகார் மனு அளித்தனர்.
What's Your Reaction?



