வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் & கழக புதிய உறுப்பினர்கள்
சேலம் அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள்(பூத் கமிட்டி )அமைத்தல் மற்றும் கழக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
சேலம் கிழக்கு மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சேலம் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்களின் ஆலோசனைப்படி, வாக்குச்சாவடி முகவர்கள்(பூத் கமிட்டி )அமைத்தல் மற்றும் கழக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம் வீராணம்,கோரத்துப்பட்டி, வளையக்காரனூர்,டி.பெருமா பாளையம்,பள்ளிப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, அதிகாரிப்பட்டி ஆகிய பகுதிகளில் அயோத்தியாபட்டணம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ரத்தினவேல் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர், டி.பெருமாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர்(எ) சாமிநாதன்,வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி ஆறுமுகம்,துணைத் தலைவர் கோபால்,மாவட்ட பிரதிநிதி அகரம் ராஜேந்திரன்,ராஜா,ஒன்றிய பொருளாளர் பழனிவேல், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.பி.ஆறுமுகம்,கவுன்சிலர் செந்தில்,அமராவதி யுவராஜ், கருணாநிதி,சண்முகம், முருகேசன்,ராமன்,பெருமாள், வார்டு செயலாளர்கள் நடராஜ், ராமு,சரண்ராஜ்,கோவிந்தராஜு, அருண்மணி,சண்முகம்,மோகன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள்,துணைத் தலைவர்கள்,கவுன்சிலர்கள், முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள்,மூத்த முன்னோடிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?