ஸ்ரீ ஐயப்பா ஆஸ்ரமத்தில் ஸ்ரீ ஐயப்பனுக்கு சிறப்பான பூஜை மற்றும் அலங்காரம் நடைபெற இருக்கிறது
ஸ்ரீ ஐயப்பா ஆஸ்ரமத்தில் ஸ்ரீ ஐயப்பனுக்கு சிறப்பான பூஜை மற்றும் அலங்காரம் நடைபெற இருக்கிறது
சேலம் குரங்கு சாவடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாஸ்தா நகர் ஐயப்பா ஆசிரமத்தில் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு சித்திரை 1 ம் தேதியை முன்னிட்டு ஸ்ரீ ஐயப்பா ஆஸ்ரமத்தில் ஸ்ரீ ஐயப்பனுக்கு சிறப்பான பூஜை மற்றும் அலங்காரம் நடைபெற இருக்கிறது.அது சமயம் பல வகையான பழங்களால் ஸ்ரீ ஐயப்பா ஆஸ்ரமத்தையும்,ஸ்ரீ ஐயப்பனையும் அலங்கரித்து தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐயப்பனின் திருப்பாதத்தில் வைத்த பூஜைகள் செய்து ஒரு ரூபாய் நாணயம் மற்றும் லட்டு பிரசாதம் ஆகியவற்றை புத்தாண்டு தினம்,பக்தர்களுக்கு வாழ்க்கை அமோகமாக இருக்க வேண்டும் என்று வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 15.04.2023 அன்று கேரள சம்பிரதாயத்தின் படி விஷீக்கனி தரிசனம் நடைபெறுகிறது.அதற்கும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து இறையருள் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.விழா காலங்களில் தரிசன நேரம் காலை 5 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மாலை 5 மணி முதல் 9 மணி வரை நடை திறந்திருக்கும் என பத்திரிகையாளர் சந்திப்பின் போது குழு கமிட்டினர் தெரிவித்தனர்.மேலும் இந்நிகழ்வில் ஸ்ரீ ஐயப்பா டிரஸ்ட் தலைவர் கே.பி.நடராஜன், செயலாளர் எம். சண்முகம்,பொருளாளர் சரவணப் பெருமாள்,உதவிச் செயலாளர் சிவக்குமார் சீனிவாசன் மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?