ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை மூளை மற்றும் நரம்பு நோய்களுக்கான தீவிர சிகிச்சை பிரிவு
ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை மேலும் ஒரு மைல் கல்லாக
மூளை மற்றும் நரம்பு நோய்களுக்கான தீவிர சிகிச்சை பிரிவினை துவக்கியுள்ளது
சேலம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் 35 ஆண்டுகளுக்கு மேலாக நவீன மருத்துவ துறையில் முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை மேலும் ஒரு மைல் கல்லாக மூளை மற்றும் நரம்பு நோய்களுக்கான தீவிர சிகிச்சை பிரிவினை துவக்கியுள்ளது. மருத்துவர் அர்த்தனாரி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது; மூளை ரத்தக்குழாய் அடைப்பு அல்லது ரத்தக் கசிவு காரணமாக ஏற்படும் பக்கவாதம் கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோய் சுய நினைவு இழப்பு, மூளை இரத்த நாள முடிச்சுகளால் ஏற்படும் தீரா தலைவலி,மூலை காய்ச்சல்,தீவிர தலை காயங்கள், சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த மாறுபாடுகளால் ஏற்படும் மூளை கோளாறுகள் போன்றவற்றிற்கான தீவிர சிகிச்சைகள் இப்பிறவில் அளிக்கப்படுகின்றன.மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாடு மற்றும் நோய்களை கண்டறிய உதவும் சிடி ஸ்கேன்,எம்ஆர்ஐ ஸ்கேன்,ஆஞ்சியோகிராம்,மூளை மற்றும் தசை மின்னலை வரைவு போன்ற நவீன வசதிகளும் மூளை ரத்தக்குழாய் உள்நோக்கி ஆய்வகமும் ஒருங்கிணைந்து இருப்பது இதன் சிறப்பம்சமாகும். இப்பிரவில் உயிர்காக்கும் செயற்கை சுவாச கருவிகள் மூளை உள் அழுத்த கண்காணிப்பு கருவிகள் கரியமில வாயு அளிக்கும் கருவிகள்,ரத்த சுத்தகரிப்பு மற்றும் மூளை மின்னலை வரைவு போன்ற நவீன வசதிகள் உள்ளன. மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை கேன்றே பிரத்தியேக அதிநவீன மைக்ரோஸ்கோப் கொண்ட அறுவை அரங்குகள் உள்ளன.மேலும் பக்கவாதத்தில் ஆரம்ப அறிகுறிகள் ஏற்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் (கோல்டன் ஹவர்) மருத்துவமனையை அணுகி முறையான சிகிச்சை பெறும் போது முற்றிலும் குணமாக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.என தெரிவித்தார்.மேலும் மருத்துவர் ஜெயதேவ்,மருத்துவர் ராஜேஷ், மருத்துவர் புனித்,மருத்துவர் பழனிச்சாமி,மருத்துவர் செந்தில்நாதன்,மருத்துவர் ராஜ்குமார்,மருத்துவர் சுப்பிரமணியம்,மருத்துவர் மோகன்,மருத்துவர் ஹரிஹரசுதன்,மருத்துவர் தரணீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
What's Your Reaction?