சேலத்தில் உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி விழிப்புணர்வு பேரணி

Sep 27, 2024 - 12:44
 79
சேலத்தில் உடற்பயிற்சி  மற்றும் நடை பயிற்சி  விழிப்புணர்வு பேரணி

சேலம் உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி சேலத்தில் தனியார் ஐவிஎஃப் பெர்ட்லிட்டி சென்டர் சார்பாக பெண்களுக்கான உடற்பயிற்சி மற்றும் உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குறிப்பாக பி சி ஓ எஸ் இந்த நீர் கட்டி மற்றும் முதல் பருமன் உள்ளிட்டவற்றை பெண்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை. மருத்துவர் களை சந்தித்து உடனடியாக சிறிய சிறிய உடற்பயிற்சிகள் மூலமாக பி சி ஓ எஸ் நோயிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம். மேலும் பெண்களுக்கான உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிக்கான விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. நீர்கட்டி உடல் பருமன் விழிப்புணர் ஏற்படுத்திடும் வகையில் சேலம் 3 ரோடு பகுதியில் இருந்து ஐந்து ரோடு புதிய பேருந்து நிலையம் மீண்டும் மூன்றோடு பகுதியில் இந்தப் பேரணி வந்து அடைந்தது. இந்த பேரணியில் உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேரணியில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவர் ஸ்ரீ அபிநயா கொடி அசைத்து பேரணியை தூக்கி வைத்தார். ஜெனிபர் மேலாளர் உடன் இருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow