சர்வதேச அமைதி தினம் பேரணி

Sep 22, 2024 - 09:18
 65
சர்வதேச அமைதி தினம் பேரணி

சர்வதேச அமைதி தின பேரணி சேலம்/செப்டம்பர். 21 சர்வதேச அமைதி தினத்தை முன்னிட்டு நல்ல மேய்ப்பர் திருச்சபை சகோதரிகள் மற்றும் ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி இணைந்து நல்லதொரு கலாச்சாரத்தை வளர்ப்பது என்ற தலைப்பில் மாபெரும் பேரணியானது கோட்டை மைதானத்தில் தொடங்கப்பட்டு ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நிறைவு பெற்றது . இந்த பேரணியை சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் ஹரி சங்கரி மற்றும் சேலம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் முருகன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். சேலம் மறை மாவட்ட ஆயர் பிஷப் அருள் செல்வம் ராயப்பன் மற்றும் தமிழ் மாநில இமாம்கள் பேரவை குழு உறுப்பினர் மௌலாவி எச்.சைபுல்லா மற்றும் பிரம்மகுமாரிஸ் ஐஸ்வர்யா விஷ்வ வித்யாலயாவின் பிரம்ம குமாரி சகோதரி மகேஸ்வரி கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து நல்லதொரு சமுதாயத்தை வளர்க்க வேண்டும் என்ற தலைப்பில் பெரிய கவுண்டபுரம் மாரியம்மன் கோவில் பெரியசாமி, சேலம் கிறிஸ்தவ பாதுகாப்பு பேரவை நிறுவனர் ஜஸ்டின்ராஜ் ,நல்ல மேய்ப்பர் கான்வென்ட் நிகழ்ச்சி இயக்குனர் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.இந்த பேரணியில் கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டது பொதுமக்கள் மத்தியில் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நல்ல மேய்ப்பர் சகோதரிகள் மற்றும் ஸ்ரீசக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியினர் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow