ஜுடா  அகடமையில் பயிற்சி பெற்று நோபல் உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளை பாராட்டி விருது வழங்கும் விழா

Sep 27, 2024 - 19:33
 49
ஜுடா  அகடமையில் பயிற்சி பெற்று நோபல் உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளை பாராட்டி விருது வழங்கும் விழா

சேலம் பொன்னம்மாப்பேட்டையில் அமைந்துள்ள ஜுடா  அகடமையில் பயிற்சி பெற்று நோபல் உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளை பாராட்டி விருது வழங்கும் விழா.

சேலத்தில் குழந்தைகளுக்கான இந்திய சாதனை மற்றும் சேவா உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜுடா அகாடமியில் பையிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் யுவஸ்ரீ, ரியாஸ்ரீ, விஜய், ஸ்ருதிக், நயோனிகா, தீப்தி . மகிழன். கவிநிலா. சாதனா.ஓவியா. அக்ஷயா ஸ்ரீ. கார்னிகா. கமலி ரித்திஜா .உட்பட 14 பேர் அபாகஸ் கல்வி முறையில் கண்களை கட்டிக்கொண்டு ஒரு மணி நேரத்தில் 600 மனக்கணிதம் மூலம் சரியான விடைகளை கண்டறிந்து இந்திய சாதனை படைத்தனர். ஃபோனிக்ஸ் பிரிவில் ரியாஸ்ரீ 16 நிமிடத்தில் 1330 எழுத்துக்களையும், கிருஷண்யா 27 நிமிடத்தில் 307 எழுத்துக்களையும் மேலும் ஒன்றை வயது துருவ ஆரியன் 300 படங்களின் பெயர்களை சரியாக கூறி  உலக சாதனை படைத்தனர். மேலும் இப்பிரிவில்  உள்ளிட்டவர்களூம்   உலக சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகுமாரன் அவர்கள் கலந்துகொண்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அகாடமி இன் நிறுவனர் செல்வராஜன் ஜீவா இணை நிறுவனர் வினோத்குமார் நிறுவன இயக்குனர் ஜெயந்தி வினோத்குமார் உட்பட ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின், பெற்றோர்கள் மற்றும் ஜுடா அகடமில் பயிலும் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow