சேலம் கோட்டை  மாரியம்மன் கோவில் 108 சங்காபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது

Oct 28, 2025 - 18:49
Oct 29, 2025 - 07:49
 27
சேலம் கோட்டை  மாரியம்மன் கோவில் 108 சங்காபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது

சேலம் கோட்டை  மாரியம்மன் கோவில் 108 சங்காபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது

சேலம் கோட்டை  மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டு ஆண்டுகள்  நிறைவு பெற்று  3 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது . இதனை யொட்டி  கணபதி ஹோமத்துடன் அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்கள் 108 சங்காபிஷேகம் தொடர்ந்து கலசத்தில் உள்ள புனித நீர் ஊற்றி கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீ மாரியம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மலர் மாலை சூட்டி மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் கட்டளைதாரர்கள், பக்தர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow