நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் மூன்றாம் நாள் - நிகழ்வு
நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின்
மூன்றாம் நாள் - நிகழ்வு
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமின் மூன்றாம் நாளான இன்று Dr. சுதாகர் ENT கேர் மருத்துவமனை சார்பில் காது, மூக்கு, தொண்டை தொடர்பான இலவச சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மருத்துவமனை பரிசோதனையாளர்களான திருமதி வெனிஷா ஆலிவர், திருமதி கிருஷ்ணவேணி, திருமதி பிரியா ஆகியோர் பங்கேற்றனர். இதில் காது கேளாதவர்களுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டதோடு, முற்றிலும்
காது கேட்காத மற்றும் ஏழ்மையில் உள்ள பொதுமக்கள் மருத்துவமனைக்குச் சென்று இலவசமாக காது கேட்கும் கருவியை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இம்முகாமின் மூலம் வட்ட முத்தாம்பட்டி ,மஜ்ரா கொல்லப்பட்டி,சர்க்கார் கொல்லப்பட்டி, அய்யம்பெருமாபட்டி ஆகிய கிராமங்களைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அதனைத் தொடர்ந்து பிற்பகல் அமர்வில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைச் சார்ந்த இளம் வேலைவாய்ப்பு அலுவலர் செல்வி. உஷா நந்தினி, மற்றும் இளம் தொழில் முனைவோர் திரு.சரண் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று இன்றைய இளம் தலைமுறையினர் போட்டித் தேர்வுகளில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த சிறப்புரையை வழங் கினார்கள்.மேலும் மாணவிகள் அச்சமின்றி போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்குரிய வழிமுறைகள், அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள். இம்முகாமில் 200 நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இறுதியாக நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களான அய்யம்பெருமாபட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி , சர்க்கார் கொல்லப்பட்டி, வட்டமுத்தாம்பட்டி ஆகிய பகுதிகளுக்குச் சென்று 60 மரக்கன்றுகளை நட்டு வந்ததோடு முகாமின் மூன்றாம் நாள் நிறைவுற்றது.
இதற்கான ஏற்பாடுகளைத் திட்ட அலுவலர்கள் முனைவர் ரா. திருப்பதி, முனைவர் பெ.தனலட்சுமி, திருமதி ரெனிஜான்சன்,
முனைவர் அ. சுபா ஆகியோர் செய்திருந்தனர்.
What's Your Reaction?