பா.ம.க. மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர், செயலாளர் கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர், செயலாளர் கூட்டம்
சேலம் சவுண்டாம்பிகை ஓட்டலில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.மாநில வன்னியர் சங்க செயலாளர் மு.கார்த்தி தலைமையில் நடைபெற்றது. ,மாநில துணை தலைவர் தேவதாஸ். ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் குணசேகரன், மாநில தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் சதாசிவம், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர். விஜயராசா ,இராஜசேகரன், செல்வக்குமார், ஜெயபிரகாஷ், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்கள் இராசரத்தினம், முருகேசன், முத்துசாமி, மாணிக்கம், பச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்கண்ட கூட்டத்தில் மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் அன்பழகன் ,மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் சென்னை ஜெயராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர்கள் சுப்பிரமணி, பாலாஜி, பூபதி, கோவிந்தராஜ், செந்தில்குமார், மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர்கள் சுரேஷ், பெருமாபட்டி முருகேசன், குமார், விஜயகுமார், மாவட்ட தேர்தல் பணிக்குழு துணை தலைவர் முருங்கப்பட்டி குணசேகரன் உள்பட நிர்வாகிகள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத்தில் நடைபெற்ற சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான தேர்தல் பணிக்குழு செயல் திட்ட கலந்தாய்வு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1. தமிழினப் போராளி மருத்துவர் அய்யா, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மரு.அன்புமணிராமதாஸ், பாராளுமன்ற உறுப்பினர் கெளவரத்தலைவர் ஜி.கே.மணி ஆகியோரது ஆலோசனைப்படி நடந்த சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான தேர்தல் பணிக்குழு தலைவர்கள் செயல் திட்ட கலந்தாய்வு கூட்டத்தில் பாமகவின் கொள்கைகளை திறம்பட, உறுதிபட சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் தேர்தல் பணிக்குழுவை கட்டமைப்போம் என இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
What's Your Reaction?